தவறான சிகிச்சையால் மரணமடைந்த இளம் கால்பந்து வீராங்கனை மரணமடைந்தது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது “
”லெக்மெண்ட் டியர் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை லெக்மெண்ட் டியர் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பெற்றிருக்கிறார். அவருக்கு பெரியார் நகரில் இருக்கும் மருத்துவர்கள் ஆட்டோ ஸ்கோப்பி என்கின்ற அதி நவீன சிகிச்சை முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இருந்தாலும் அந்த மருத்துவரின் கவனக் குறைவு காரணமாக, காலில் போடும் கட்டை அழுத்தமாக கட்டியுள்ளனர்.
இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளாகி உள்ளார். அவர் 10ம் தேதி அவர் உயர் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். இங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பற்றி நான் நேரடியாக கேட்டறிந்தேன். அவருக்கு மூத்த மருத்துவ வல்லுநர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று நள்ளிரவுக்கு மேல் சிறுநீரக பாதிப்பு, இதயம் பாதிப்பு ஏற்பட்டது. இன்று காலையில் அவர் உயிர் பிரிந்தது. மருத்துவ வல்லுநர் குழு எங்கள் தலைமையில் அமைக்கப்பட்டது. அவர்கள் பெரியார்நகர் அரசு மருத்துவர்கள் குழு செய்த சிகிச்சையைப் பற்றி கேட்டறிந்தனர். அப்போது சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவர்களின் கவனக்குறைவால் இது ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்ற பிறகு, அந்த இரு மருத்துவர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டார். ” என்று அவர் கூறினார்.