புதிய வகை கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இதுதான்: மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழத்தில் 98 %-க்கு மேற்பட்டவர்களுக்கு 3 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழத்தில் 98 %-க்கு மேற்பட்டவர்களுக்கு 3 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சட

தமிழத்தில் 98 %-க்கு மேற்பட்டவர்களுக்கு 3 தவணை கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

 செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:  “கொரோனா தொற்றிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் செயலால், 98 %-க்கும் அதிகமானோருக்கு 3 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் பலவகையில் உள்ளது. ஒமிக்ரானில் வேரியண்டில் கூட பல வகைகள் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் பலருக்கு உறுமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் பணியாற்றுகிற மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் சொன்ன தகவலில், கொரோனா பாதித்த நபர்கள் 3 நாட்களில் குணமடைந்துவிடுகிறார்கள். இருமல், சளி ஆகிய உபாதைகள் மட்டுமே ஏற்படுகிறது.

கேரளாவில் நேற்று  280 பேருக்கு  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் புதிய வகை தொற்று தொடர்பாக கேட்டபோது, அதே பதிலையே கூறினார்கள். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்பாக கண்காணித்து வருகிறோம். காய்ச்சல் அதிகமாக உள்ள உடங்களில், ஆர்.டி- பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஒரு இலக்க எண்களில் உள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, எந்த மாதிரியான வேரியண்ட் என்பதை கண்டயறிய உள்ளோம். தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களில் 8 வது மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த 7 வாரங்களில் இதுவரை 16, 516 மருத்துவ  முகாம்கள் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயனைந்துள்ளனர்.” என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: