scorecardresearch

23 அடிக்கு கீழ் மெட்ரோ ரயில் நிலையம்: மாதவரத்தில் சி.எம்.ஆர்.எல்.இன் அடுத்த திட்டம்

மாதவரம் டிப்போ மெட்ரோ, தரையில் இருந்து 6.9 மீட்டருக்கு கீழ்(23 அடி) மிக ஆழமற்ற நிலத்தடி மெட்ரோவாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

chennai metro

நந்தனம் மெட்ரோவின் இரண்டாவது கட்டத்தில் 30 மீட்டர் (100 அடி) ஆழத்தில் உள்ள நிலத்தடி மெட்ரோ நிலையமாக இருப்பதால், மாதவரம் டிப்போ மெட்ரோ தரையில் இருந்து 6.9 மீட்டருக்கு கீழ்(23 அடி) மிக ஆழமற்ற நிலத்தடி மெட்ரோவாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் நேரடியாக கீழே உள்ள தளங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுடன் இணைந்த வழியில் வெளியேற வசதி செய்து தரப்படும். மாதவரம் டிப்போ மெட்ரோ, மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலான 47 கிமீ நடைபாதையின் ஒரு பகுதியாகும். 118.9 கிமீ இடத்தைக்கொண்ட கட்டம் – 2 மெட்ரோ கட்டுமானப்பணி, 2026 க்குள் தயாராக இருக்கும்.

மாதவரம் டிப்போ ஸ்டேஷன், சாலை மட்டத்தில் இருக்கும் மாதவரம் டிப்போவில் இருந்து 1.1 மீ தொலைவில் அமைந்திருப்பதால், இது ஒரு ஆழமற்ற நிலத்தடி நிலையமாக இருக்கலாம் என்று மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்த நிலையம் தாழ்வாரத்தின் கடைசி நிலத்தடி ஸ்டேஷன் ஆக அமையும். இது திறந்த நிலத்தில் அமைந்திருப்பதால், ஆழம் குறைவாக இருக்கும். கான்கோர்ஸ் அல்லது டிக்கெட் நிலை தெரு மட்டத்தில் இருக்கும்” என்று மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாதவரம் டிப்போ ஸ்டேஷனின் இருபுறமும் மாதவரம் பால் காலனி நிலையமும், அசிசி நகர் மெட்ரோவும் இருக்கும். மாதவரம் பால் காலனியின் நிலத்தடியில், காரிடார்- 3 மற்றும் 5ஐ இணைக்கும் இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன் கட்டப்படும் அதே வேளையில், அசிசி நகரின் கீழ் மெட்ரோ காரிடார்- 5 கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madhavaram to get underground metro station cmrl

Best of Express