குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு, குடியைப்பற்றிய விழுப்புணர்வு துண்டறிக்கையை பொதுமக்களுக்கு 2 வாரங்கள் வரை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி ஜகதீஷ் சந்திரா, குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இளைஞருக்கு ஜாமீன் வழங்கும் வழக்கில் முக்கிய தீர்பளித்துள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி இளைஞரால், 3 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தைவிட்டு இவர் தப்பி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இளைஞரை ஜாமீனில் எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குடியினால் ஏற்படும் தீமைகளை சமந்தபட்ட நபர் உணர வேண்டும் என்பதால் 2 வாரங்கள் வரை அவர் குடி போதை பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். என்று உத்தரவிட்டார். மேலும் அவர் ரூ.25,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அவருக்கு ஜாமின் வழங்கூடாது என்று வாதிட்டபோது, சமந்தபட்ட நபருக்கு குடும்பம் இருக்கிறது என்றும் அவரால் காயமடைந்தவர்கள் தற்போது குணமாகி விடு திரும்பிவிட்டதால், அவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிடுவதாக நீதிபதி கூறியுள்ளார்.
அவர் சென்னையில் உள்ள அடையார் காவல்நிலையத்திற்கு 2 வாரங்கள் தினமும் ஆஜராகி, காலையில் 9-10 மணிவரையும் மாலை 5 முதல் 7 மணி வரையும் குடி போதை தொடர்பான விழிப்புணர்வு துண்டற்றிக்கையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.