எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் கைது : சிபிசிஐடி விசாரணை

எதற்காக இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என நவம்பர் 30ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு.

By: Published: November 2, 2018, 8:29:53 PM

சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சென்னை- சேலம் 8 வழி சாலை – உயர் நீதிமன்றம் விசாரணை

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும் சுற்றுசுழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளை தொடங்க மாட்டோம் என மத்திய அரசு தரப்பில், உறுதியளிக்கப்பட்டது.

மேலும், பசுமை வழிசாலை என்பது பசுமை நிறைந்த சாலை என கருத முடியாது என்றும் புதிய நெடுஞ்சாலையை தான் பசுமை வழி சாலை என அழைக்கப்படுவதாகவும் மத்திய அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, தமிழகத்தில் உள்ள பல்லுயிர் வகைகளை பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததால் அவை செயல்படவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிபிசிஐடியிடம் வழக்கு ஒப்படைப்பு

8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் ரத்தினம் வாதிட்டார்.  பொதுமக்கள் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ஏன் ரத்து செய்ய கூடாது என கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 30ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madras hc condemns police arrested protester chennai salem 8 way lane

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X