Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தண்டனை: யார் இந்த பொன்முடி?

தமிழகத்தின் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி பகுதியில் கணிசமான செல்வாக்கை கொண்டுள்ள உயர் கல்வி அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்துடன் பல்வேறு தொழில்களை நடத்திவருகிறார்.

author-image
WebDesk
New Update
Madras HC convicts K Ponmudy

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனை விவரங்கள் டிச.21ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ponmudi | madras-high-court  | மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் டிச.21ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Advertisment

நடப்பாண்டு ஜூலை மாதம் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

2011 சட்டவிரோத மணல் சுரங்கத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடந்தது. 2006 மற்றும் 2011 க்கு இடையில் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் அமைச்சராக பொன்முடி இருந்த காலத்தில் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன.

இது, ரூ.28.37 கோடி மதிப்பு கொண்டதாகும். 72 வயதான பொன்முடி சிறிது காலம் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். 1989 ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆறு முறை எம்.எல்.ஏ ஆக பணியாற்றியுள்ளார். சிறுபான்மை வாக்குகளை திமுகவுக்கு கொண்டு வருவதில் அவர் முக்கிய நபராக கருதப்படுகிறார். உச்சநீதிமன்றம் அவரது தண்டனையை ஆதரித்தால், பொன்முடி தனது தொகுதி மற்றும் மந்திரி பதவியை இழப்பார்.

இவரது குடும்பம் சூர்யா கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இதில் உள்ளன.

இவரது மகன் பி அசோக் சிகாமணி ஒரு மருத்துவர் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். கடந்த காலங்களில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பொன்முடி தொடர் மோதல் போக்கை கடைப்பிடித்துவருகிறார்.

இந்தி மொழி குறித்து ஆர்.என். ரவி பேசியபோது, தமிழ், ஆங்கிலம் மட்டும் போதுமானது எனத் தெரிவித்திருந்தார். மேலும் இந்தி படித்தவர்கள் கோயம்புத்தூரில் பானிபூரி விற்கிறார்கள் எனவும் கூறியிருந்தார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Madras HC convicts Tamil Nadu Minister: Who is K Ponmudy?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madras High Court Ponmudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment