Madras High Court | Enforcement Directorate: சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஓஷன் லைஃப் ஸ்பேஸ். இந்த நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. இதனை எதிர்த்து நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஓஷன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றப்பிரிவு வழக்கு ரத்துசெய்யப்பட்டு விட்டால், அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது என்றும், ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன், சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஓஷன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்கவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“