Advertisment

'டி.டி.எஃப் வாசன் யூடியூப்பை க்ளோஸ் பண்ணுங்க; பைக்கை எரித்து விடலாம்': ஐகோர்ட் கருத்து

டி.டி.எப். வாசனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது பைக்கை எரித்துவிடலாம், அவரது யூடியூப் சேனலை முடக்கிவிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
  Madras HC reject T.T.F. Vasan bail his to bike burn YouTube channel to close down Tamil News

டி.டி.எப். வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TTF-vasan | madras-high-court: அதிவேக பைக் ரைடரான பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தின் போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

Advertisment

இந்த சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் யூடியூபர் டி.டி.எப். வாசன் எனும் வைகுண்ட வாசன் மீது கடந்த 19ம் தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் ஆஜர் படுத்தி தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் நேற்று வரை கோர்ட்டு காவலில் வைக்கப்பட்டார்.

3 முறை தள்ளுபடியான ஜாமீன் மனு 

டி.டி.எப். வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில், ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் 3 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று 4-வது முறையாக பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம்  மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் டி.டி.எப். வாசனுடைய வழக்கறிஞர் வக்கீல் மனு செய்திருந்தார். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் டி.டி.எப். வாசனை போலீசார் ஆஜர் படுத்த வேண்டிய நிலையில், காணொலி காட்சி மூலமாக டி.டி.எப். வாசனை பாலுசெட்டி சத்திரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, அதிவேக பைக் விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு வருகிற 16ம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்- 1 நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றனர். 

இந்நிலையில், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி யூடியூபர் டி.டி.எப் வாசன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் அப்பாவி, எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

பைக்கை எரித்து விடலாம் - நீதிபதி கருத்து

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், "யூடியூபில் 45 லட்சம் லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள். 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்து அவர் சென்றதால், இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பி இருக்கலாம். 

ஆனால் இதைப்பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கித்தரும்படி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள்" என்று ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வலதுகையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வருவதால், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இளைஞர்களைத் தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரர், தனது யூடியூம் சேனலை முடக்கிவிடலாம், அவரது பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madras High Court TTF Vasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment