Advertisment

சென்னை ஐகோர்ட்டில் அடுத்த ஒராண்டில் ஓய்வுபெறும் 12 நீதிபதிகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்களில் இப்போது 45 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 15 கூடுதல் நீதிபதிகள் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 12 பேர் அடுத்த ஓராண்டில் ஓய்வு பெற உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Madras High Court, 12 Madras High Court judges to retire from service in next one year, சென்னை ஐகோர்ட், சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த ஒராண்டில் ஓய்வுபெறும் 12 நீதிபதிகள், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், chennai high court, chennai high court judges

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்களில் இப்போது 45 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 15 கூடுதல் நீதிபதிகள் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 12 பேர் அடுத்த ஓராண்டில் ஓய்வு பெற உள்ளனர். விரைவில் தலைமை நீதிபதி ஆக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் தற்காலிக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் நீதிபதிகளில் ஒருவராக உள்ளார்.

Advertisment

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 45 நிரந்தர நீதிபதிகளில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முதல் ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து நீதிபதிகள் வி.பார்த்திபன், வி.பாரதிதாசன், ஆர்.பொங்கியப்பன், எம்.கோவிந்தராஜ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முறையே ஏப்ரல் 23, மே 6, மே 11, மே 18 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் ஓய்வு பெறுகிறார்கள்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில், தற்போதைய தற்காலிக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, (ராஜஸ்தானைச் சேர்ந்தவர்), நீதிபதி எம். துரைசாமி (இவர் நீதிபதி பண்டாரி பதவியேற்கும் வரை, தற்காலிக தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்) மற்றும் நீதிபதி பரேஷ் உபாத்யாய் உட்பட மூன்று மூத்த நீதிபதிகள் ( குஜராத்தைச் சேர்ந்தவர்) செப்டம்பர் 12, செப்டம்பர் 21 மற்றும் டிசம்பர் 13 ஆகிய தேதிகளில் ஓய்வு பெறுகிறார்கள்.

மேலும், இரண்டு கூடுதல் நீதிபதிகள், நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோரும், இந்த ஆண்டு ஜூலை 30 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் ஓய்வு பெற உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பதினொரு நீதிபதிகள் ஓய்வு பெறுவதோடு, நீதிபதி பி.என். பிரகாஷ் ஜனவரி 11, 2023 அன்று ஓய்வு பெறுகிறார். உயர்நீதிமன்றத்தில் இப்போது 45 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 15 கூடுதல் நீதிபதிகள் பணிபுரிகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 75 நீதிபதிகள் பணி இடங்களின் எண்ணிக்கையில் மொத்தம் 60 நீதிபதிகளே உள்ளனர்.

சென்னை நீதிமன்றத்தில் இருந்து 4 நீதிபதிகள் பிற மாநிலங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களில் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிபதியான நீதிபதி டி.எஸ். சிவஞானம். நீதிபதிகள் எம்.வி. முரளிதரன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முறையே மணிப்பூருக்கும், டெல்லிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது உள்ள 60 நீதிபதிகளில் 12 நீதிபதிகள் அடுத்த ஓராண்டுக்குள் ஓய்வு பெறுவதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 48 ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai High Court Tamilnadu Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment