Advertisment

'உங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்றுள்ளீர்கள்' - பேனர் விவகாரத்தில் ஐகோர்ட் கண்டனம்

மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madras high court condemns on banner case subashri death case - 'உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுள்ளீர்கள்' - பேனர் விவகாரத்தில் ஐகோர்ட் கண்டனம்

madras high court condemns on banner case subashri death case - 'உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுள்ளீர்கள்' - பேனர் விவகாரத்தில் ஐகோர்ட் கண்டனம்

உங்கள் மருமகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுள்ளீர்கள் என பேனர் வைத்த விவகாரத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை பள்ளிக்கரணையில் திருமண நிகழ்ச்சிக்கு கடந்த செப்டம்பர் மாதம் சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் மருமகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுள்ளீர்கள் என்று மனுதரார் தரப்பிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, சம்பவம் நடைபெற்ற பிறகு ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என ஜெயகோபால் தரப்பிற்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஜெயகோபால் தரப்பில், விபத்து நடத்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அன்று ஜாமீன் மனுவிற்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment