மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தவறான தகவல்களை வழங்கிய அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் கே.சி.வீரமணி ஆகியோரை அமைச்சர் பதிவிலிருந்து நீக்ககோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மனோகரன் என்பவர் அமைச்சரகள் திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் கே.சி.வீரமணி ஆகியோரை அமைச்சர் பதிவியில் இருந்து நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரின் உடல்நிலை குறித்து அமைச்சர்கள் தவறான தகவல் கூறினர். பின்னர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது இட்லி சப்பிட்டதாகவும், வழக்கமான உணவு எடுத்ததாக, சசிகலா எங்களிடம் சொல்ல சொன்னதை அவருடைய மிரட்டல் மற்றும் பயத்தின் காரணமாக பொய் கூறியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
அதைபோல் அமைச்சர் கே.சி.வேலுமணி ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என தெரிவித்தார். அமைச்சர்களின் இந்த பேச்சு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.இவர்களின் பதவியேற்பு உறுதி மொழிக்கு எதிராக இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதால் தகுதி நீக்க வேண்டும் செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆளுநரின் செயலாளருக்கு கடந்த செப்டம்பர் மாதம் புகார் மனு அளித்தேன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இருவரையும் அமைச்சர் பதவிலிருந்து நீக்க ஆளுநர் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.மேலும் இது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.