சாந்தி திரையரங்கு விவகாரம்.. சிவாஜி மகள்கள் மனு தள்ளுபடி… உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாந்தி திரையரங்கு விற்பனைக்கு தடை கோரிய நடிகர் சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள், சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை திங்கள்கிழமை (அக்.17) சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக, இந்த வழக்கில் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி திரையரங்கு விற்பனை தொடர்பாக சில கூடுதல் மனுக்களையும் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் பிரபு தரப்பு சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ஆம் ஆண்டிலேயே கைமாறி விட்டது எனக் கூறியிருந்தது.
தொடர்ந்து தனியார் கட்டுமான நிறுவனமும் இதே விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்பித்தது. இந்த நிலையில், சிவாஜி மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“