பொன். மாணிக்கவேல் பணி ஓய்வு : சிபிசிஐடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொன்.மாணிக்கவேலுக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில் அவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது . இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் சேகர் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் பொன்.மாணிக்கவேல் மீது, குஜராத் மாநிலத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளையில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமா தேவி சிலைகள் உண்மையானவை அல்ல எனக் கூறி, அவரது விசாரணையில் நடந்த தவறுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவு
இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு பணி ஓய்வு கொடுத்தது தவறு என்றும், அவர் மீது சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். எனவே அவர் பணி ஓய்வு உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கின் விசாரணை நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தலையிட முடியாது எனவும் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.