Madras High Court | பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தண்டனையை நிறுத்திவைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்.23,2024) தள்ளுபடி செய்தது.
2021 இல் பணியில் இருந்தபோது பெண் காவல் கண்காணிப்பாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் ஜூன் 2023 இல், விழுப்புரத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
இவர் மீது 354A (2) IPC மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2020 இன் பிரிவு 4 மற்றும் IPC யின் பிரிவு 109 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சீராய்வு மனு மீதான பரிசீலனை நிலுவையில் உள்ள தண்டனையை இடைநிறுத்துவதற்கான தாஸின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி எம்.தண்டபாணி, காவல்துறை தலைமை இயக்குநராக பதவி வகித்து வரும் தாஸின் அந்தஸ்தில் உள்ள ஒருவர் தன்னை சரியான முறையில் நடத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இது குறித்து நீதிபதி, “மறுசீராய்வு மனுதாரர் புதியவர் அல்ல என்பதையும், மறுஆய்வு மனுதாரர் காவல்துறை தலைமை இயக்குநராக பதவி வகித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்தால் அது நீதிக்கு உகந்ததாக இருக்காது.
ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட படையில் இருந்து வரும் அந்த அந்தஸ்து, முறையான முறையில் நடந்து கொள்ள வேண்டும், ஆனால் சீராய்வு மனுதாரரின் செயல் காவல்துறையின் மன உறுதியை சீர்குலைத்துள்ளது” என்றார்.
இந்த வழக்கில், சாட்சியான பெண் அதிகாரியின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக தாஸ் வாதிட்டார்.
இந்த நிலையில் நீதிபதி, இதனால் தண்டனையை நிறுத்தி வைக்கவோ அல்லது தாஸ் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவோ நீதிமன்றம் முன்வரவில்லை.
தாஸ் ரோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதற்கும், வழக்கமான ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வதற்கும் நீதிமன்றம் சுதந்திரம் அளித்தது, அதை விசாரணை நீதிமன்றம் பரிசீலித்து அதே நாளில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“