/tamil-ie/media/media_files/uploads/2022/07/ttf-vasan-age.jpg)
இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
TTF Vasan | Madras High Court | காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே கடந்த மாதம் (செப்.2023) பைக்கில் சென்றபோது டி.டி.எஃப் வாசன் விபத்தில் சிக்கினார்.
அப்போது, சாகசம் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் எனக் கூறப்பட்டது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
இதற்கிடையில், டிடிஎஃப் வாசன் மீது அதிவேகமாக பைக் ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு முதலில் ஜாமின் மறுக்கப்பட்டது. மேலும் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செயய்யப்ப்டடது. அவரின் பைக்கை எரித்து விடலாம் எனவும் நீதிபதி கூறினார்.
இதற்கிடையில் இன்று (நவ.1) டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 3 வாரங்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டிடிஎஃப் வாசனுக்கு ஜாமினுக்கு கிடைத்தது அவரது ரசிகர்களை மகிழ்வடைய செய்துள்ளது. டிடிஎஃஎப் வாசன் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருந்தார். அந்தப் படத்துக்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.