ஒரே பாலின உறவில் உள்ள பெண்கள்; பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

இரண்டு ஆண்டுகளாக ஒரே பாலின் உறவில் உள்ள பெண்கள், தங்களுடைய பெற்றோர்கள் தங்களை பிரிந்து செல்ல அழுத்தம் கொடுத்ததாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இந்த 2 பெண்களும் மதுரை விட்டு வெளியேறி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளனர்.

ஒரே பாலின உறவில் உள்ள இரண்டு பெண்களின் பெற்றோருக்கு இந்த துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தை அறிவுப்பூர்மவமாக எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இரு தரப்பினரும் அமைதியான தீர்வை நோக்கி செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், “இந்த பிரச்னையை பிரச்னையை புரிந்துகொள்வதுதான் தற்போதைய தேவை” என்று கூறினார்.

ஒரே பாலின உறவில் உள்ள 2 பெண்கள், தங்களுடைய பெற்றோர்களிடம் இருந்து எந்த இடையூறும் இல்லாமல் சேர்ந்து வாழ்வதற்கு பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவுகளைப் பிறப்பிதார்.

ஒரே பாலின உறவில் உள்ள ஒரு பெண்ணுக்கு 22 வயது அவர் எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். மற்றொரு பெண் இளங்கலை மாணவி. மதுரையைச் சேர்ந்த இருவரும் 2 ஆண்டுகளுக்கு மேல் உறவில் உள்ளனர். அவர்கள் நீதிபதியிடம் நீதிபதியிடம் கூறுகையில், தங்களுடைய நட்பு காதலாக மலர்ந்ததாகவும் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்க்கை துணையாக இருப்பதில் மிகவும் தெளிவாக உள்ளனர் என்று தெரிவித்தனர்.

ஆனால், அவர்களுடைய பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. அவரகளைப் பிரிக்க அவர்கள் மீது அழுத்தம் கொடுத்தனர். அதனால், இந்த பெண்கள் மதுரையை விட்டு வெளியேறி ஒரு என்.ஜி.ஓ பராமரிப்பில் உள்ளனர்.

நீதிபதி இடைக்கால உத்தரவை அளிப்பதற்கு முன்பு, நீதிபதி தனிப்பட்ட முறையில் சில ஆராய்ச்சிகளைச் செய்வதில் நேரத்தைச் செலவிட்டதாகவும், இந்த விவகாரம் குறித்த சரியான புரிதலுக்கு வருவதற்கு தரவுகளைச் சேகரித்ததாகவும் கூறினார்.

அவர் தனது உத்தரவை நிறைய ஆராய்ச்சித் தரவுகளுடன் சேர்த்து, அறிவார்ந்த உத்தரவை வழங்கியதற்காக வெளி உலகத்தால் பாராட்டப்படக் கூடும் என்று என்று கூறினார்.

“ஆனால், இந்த கட்டத்தில் நான் அத்தகைய ஒரு பயிற்சியில் இறங்கினால், அது என்னைப் பற்றி பாசாங்குத் தனமாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது. இந்த மிக முக்கியமான பிரச்சினையைப் பற்றிய எனது உண்மையான மற்றும் நேர்மையான உணர்வை இந்த உத்தரவு வெளிப்படுத்தாது.” என்று கூறினார்.

மேலும், “வெளிப்படையாக இருப்பதற்கு, நான் இந்த பிரச்னையைப் பற்றிய எனது சொந்த முன்கூட்டிய கருத்துகளை உடைக்க முயற்சிக்கிறேன். மனுதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள நான் பரிணமித்து வருகிறேன். அதற்காக நான் நேர்மையாக முயற்சிக்கிறேன். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான உத்தரவை எழுத தொடங்கினேன்.” என்று நீதிபதி கூறினார்.

அவர் இந்த வழக்கை படிப்படியாக உருவாக முயன்றதாகக் கூறிய நீதிபதி, இறுதியில் இந்த பிரச்னையில் ஒரு நோக்கத்தை உருவாக்கியதாகக் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் அந்த பெண்களின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அது குறித்து ஏப்ரல் 26ம் தேதி ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி பிரபல உளவியலாளர் வித்யா தினகரனுக்கு அறிவுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras high court interim order parents of same sex partners counselling

Next Story
கொரோனா: தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க ஆட்சியர்களுக்கு அனுமதிcoronavirus, lockdown extended april 30th, tamil nadu govt order lockdown extended april 30th, கொரோனா, கொரோனா வைரஸ், ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு, tamil nadu, coronavirus, covid-19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express