சென்னை லூப் சாலைகளில் உள்ள மீன் கடைகளை அகற்றக் கோரிய மனுக்கள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (ஏப்.19) விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள், “மீனவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்டதுதான் உரிமை என உறுதியாகக் கூறுகின்றனர். இப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நீதிபதியையும் நியாயந்தீர்க்கத் தொடங்கிவிட்டனர்.
மக்கள் எல்லாவற்றையும் நம்புகிறார்கள். எனவே, அரசு சற்று விவேகத்தைக் காட்ட வேண்டும். மீனவர்கள் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஆக்கிரமித்துள்ளது பொதுச் சொத்து” எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தை மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தயங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசாங்கம் பின்வாங்கினால், "இங்குள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியையும் வற்புறுத்த நீதிமன்றம் தயாராக உள்ளது" என்றும் நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக மெரினா லூப் சாலையில் உள்ள மீன்கடைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சென்னை லூப் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரம் முதல் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“