/indian-express-tamil/media/media_files/FIWvmi0kSLIT0uJsZvsO.jpg)
கூகுள் இணையத்தில் ஆபாச வலைதளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலப்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.
இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பர படுத்துகின்றனர். இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அபாயம் உள்ளது' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகால், கூகுள் நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.