பாலியல் தொந்தரவு தந்த சிறப்பு டிஜிபி ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை? நீதிமன்றம் கேள்வி

மாநில அரசால் பணியிடை நீக்கம் செய்யப்படாத அளவிற்கு மிகவும் அதிகாரம் கொண்டவரா என்றும் நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்

special DGP sexual harassment case, Women IPS officers meet Tamil Nadu DGP tamil news
special DGP sexual harassment case tamil news

Madras High Court on sexual harassment: சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு தந்த சிறப்பு டி.ஜி.பியை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு, ஐ.பி.எஸ் அதிகாரி சிறப்பு டிஜிபி குறித்து புகார் அளிக்க வந்த போது அவரின் காரை வழிமறித்த செங்கல்பட்டு எஸ்.பியை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தது. இது தொடர்பாக மார்ச் 16ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

“எஸ்.பி. வெறும் அம்பு மட்டுமே…. ஆனால் சிறப்பு டி.ஜி.பி. தான் வில். எஸ்.பி. மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்படாதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாநில அரசால் பணியிடை நீக்கம் செய்யப்படாத அளவிற்கு மிகவும் அதிகாரம் கொண்டவரா என்றும் நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து எடுத்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர் மற்றும் புகார் அளித்தவர் இருவரின் பெயர்களை பிரசுரிக்க கேட்டுக்கொள்ளப்பட்ட கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

மேலும் படிக்க : தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாரா அமைச்சர்? பறக்கும் படையினர் புகார்.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த காரணத்தால் சிறப்பு டிஜிபி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். டிஜிபிக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் அப்துல் சலீம், குற்றம் சுமத்தப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறார் என்றும், அவருடைய பதிலை உள் புகார்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த ஐ.சி.சி. குழுவில் இடம் பெற்றிருக்கும் அதிகாரி ஒருவர், வாட்ஸ்ஆப்பில், விசாரணையே நடத்தாமல் குற்றம் சுமத்தப்பட்டவரை தூக்கிலிட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்ததாகவும் அப்துல் கூறியுள்ளார். இந்த வழக்கில் சாட்சியாக நான் பார்த்த மற்றொரு நபர் அந்த குழுவின் உறுப்பினராக தற்போது இருக்கிறார். வழக்கு விசாரணை எப்படி நடைபெற்று வருகிறது என்பதை சீல் வைக்கப்பட்ட உரையில் தர அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு இந்த வழக்கில் சமர்ப்பிப்பதை விட இங்கே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தொடர்ந்து கவனித்தால் நான் அதைப் பாராட்டுகிறேன். நீங்கள் சமர்ப்பிக்கும் அளவுக்கு நீதிமன்றத்தில் சிக்கல் உள்ளது. நீங்கள் எந்த எதிர்ப்பை உருவாக்க விரும்பினாலும், அதை எழுத்துப்பூர்வமாகக் கொடுத்து, அது வழக்கு கோப்பின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளுங்கள் என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras high court on sexual harassment asked why dgp is not suspended

Next Story
தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அமைச்சர்? பறக்கும் படையினர் புகார்!Flying squad official lodges complaint against Tamil Nadu minister
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express