சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக உளவியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மாநகராட்சி சார்பில் பல்வேறு சிக்னகளில் பசுமை நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இது போல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், மாலை நேரங்களிலும் பொதுமக்கள் கடற்கரைகள், மற்றும் பூங்காக்களுக்கு சென்று வருகிறார்கள். அதேவேளையில், இரவு 9 மணிக்கு மேல் பூங்காக்கள், கடற்கரைகளில் இருக்க கூடாது என பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்துகிறார்கள். எனவே, அவர்களுக்கு கூடுதலாக அதிக நேரம் கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் மக்கள் இருப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் "என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், பி.பி பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“