அனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் – கட்டிடத்தை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, கலையரங்கக் கட்டிடத்துடன் சேர்த்து 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு […]

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, கலையரங்கக் கட்டிடத்துடன் சேர்த்து 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் கிளப் பயன்படுத்தி வந்தது. அந்த நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக 48.85 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ம் ஆண்டில் மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறிக் கொண்டு, சட்டவிரோதமாக கிளப் செயல்பட்டுள்ளதாகவும், சில வசதியான நபர்களுக்காக சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் எனவும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறி, டவர் கிளப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras high court ordered to remove anna nagar tower club building

Next Story
‘நடிகர் சங்க தேர்தல் செல்லாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்south indian Film Artistes Association madras high court nadigar sangam - தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பின்னடைவு - தனி அதிகாரி நியமனத்தில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X