Madras High Court | Greater Chennai Corporation | சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், “தனியார் மருத்துவமனை ஒன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கட்டுமானப் பணிகள் காரணமாக கடுமையான ஒலி மாசு ஏற்படுகிறது.
மேலும், கட்டடப் கட்டுமானப் பணிகள் நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை நடைபெறுகின்றன. இந்தப் பகுதியில் மூத்தக் குடிமக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினேன். எந்தப் பதிலும் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிஎம்டிஏ, காவல் துறையினருக்கு புகார் அளித்தும் எந்தப் பதிலோ அல்லது நடவடிக்கையோ இல்லை. ஆகவே இந்தப் பணிகளுக்கு நேரம் நிர்ணயிக்க வேண்டும். மேலும் ஒலி மாசுபாட்டையும் கட்டுப்படுத்த வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிஎம்டிஏ தரப்பில் உரிய அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள பள்ளிக் கூடத்தில் விரிசல் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து நீதிபதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“