கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் போஸ்ட்டைச் சேர்ந்த டி.சுரேஷ்பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.
சிவன் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சைவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட அவர், பல இந்து கோவில்களில் ஷீரடி சாய்பாபாவின் வெள்ளை பளிங்கு சிலைகளை நிறுவும் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து காவலை தெரிவித்தார். மேலும் இந்த நடைமுறை ஆகமங்களுக்கு எதிரானது தனது மனுவில் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக டி.சுரேஷ்பாபு தனது மனுவில், "சாயிபாபாவின் பெற்றோரைப் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் இருக்கிறது. அதாவது அவரது தந்தை ஒரு ஏழை முதியவர் அல்லது புனித தந்தை அல்லது துறவி தந்தை என்கிறார்கள். சாயிபாபாவின் உண்மையான பெயர் கூட தெரியவில்லை. அவரை இஸ்லாம் சமயத்தவர்கள் பலரும் பின்பற்றும் நிலையில், அவரது மத அடையாளம் குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.
சாயிபாபா அடிக்கடி பாரசீக வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். சாய்பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளில் அல்லாஹ், மற்றும் குரானைப் பற்றி பேசுகிறார். 'நம்மிடம் இருப்பதில் திருப்தியடைவோம், நம் விருப்பத்தை அல்லாஹ்விடம் சமர்ப்பிப்போம் (அல்லாஹ் ரக்கேகா வையா ரஹேனா)' என்ற சொற்றொடரை சாய்பாபா அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். அவரே சில சமயங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றியும் பேசுகிறார்.
சாய்பாபா வழிபாடு இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பதால், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை இந்து சமய அறநிலையத்துறை துறையினர் நிர்வகிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஷீரடி சாய்பாபாவின் சிலைகள் இந்து கோவில்களில் தாராளமாக நிறுவப்படுகின்றன. அவர் இஸ்லாம் மற்றும் இந்து மதம் இரண்டையும் போதித்த நபராக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் ஷீரடி சாய்பாபாவின் வெள்ளை பளிங்கு சிலைகள் இந்து மதத் தளங்களில் இருக்கிறது. மேலும், இது ஆகமங்களுக்கு எதிரான நந்திக்கு அருகில் நிறுவப்படுகிறது.
இந்து கோவில்களில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலைகளை அகற்றவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிலைகள் இந்த கோவில்களில் நிறுவப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் மனுதாரர் கோரினார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூன் 25) செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை அரசின் தலைமை காஜி மற்றும் அகில இந்திய சாய் சமாஜ் ஆகியோருக்கு எதிரான லியுறுத்தவில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை துறையிடம் இருந்து மட்டும் இரண்டு வாரங்களுக்குள் அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“