தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? எதற்காக வழங்கபடுகிறது ? என பதிலளிக்க தமிழக அரசு, டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By: March 9, 2020, 10:27:03 PM

தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? எதற்காக வழங்கபடுகிறது ? என பதிலளிக்க தமிழக அரசு, டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 21-ம் தேதி அவரது மகன் சதீஷ்குமார், தொழிற்சாலை உள்ளிட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்ற கேட்டு, உறவினர்களுடன் வந்து குப்புசாமியை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து குப்புசாமி சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் குப்புசாமியை அழைத்து சொத்துக்களை மகனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் வழக்கறிஞரின் ஆலோசனை பெற வந்த குப்புசாமி, ஊர் திரும்பவில்லை என கூறி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என அவரது சகோதரர் பக்தவச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான குப்புசாமி தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய தவறிய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீநிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள்,

தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கபடுகிறது?

எதற்காக இந்த பாதுகாப்பு வழங்கபடுகிறது?

இவ்வாறு வழங்கபடும் போலீஸ் பாதுகாப்பு தேவையா? இல்லையா? என்பதை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அல்லது எத்தனை மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது?

கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எதற்காக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

சமூதாயத்தில் தன்னை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள தனிநபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கபடுகிறதா?

என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மார்ச் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சூனாம்பேடு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Madras high court questions tamil nadu police protection gives to how many individuals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X