Advertisment

ஆசிரியர்கள் நியமனம்: சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட் அரசுக்கு அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் நியமனத்தின் போது அவர்களின் குற்றப் பின்னணியை காவல் துறை மூலம் ஏன் சரிபார்க்கக் கூடாது? இதுகுறித்து அரசு ஏன் ஒரு முடிவு எடுக்கக் கூடாது? என ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

author-image
WebDesk
New Update
HR CE Report produce on Dikshitars of Chidambaram Nataraj Temple have sold 2000 acres of land | madras highcourt

ஆசிரியர் நியமனம் வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே, தகுதித் தேர்வுடன் போட்டித் தேர்வுகள் மூலமாகவும்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என 2018 ஆம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டப்பட்டது.

Advertisment

இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது ஆசிரியர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆசிரியர்கள் நியமனத்தின் போது அவர்களின் குற்றப் பின்னணியை காவல் துறை மூலம் ஏன் சரிபார்க்கக் கூடாது? இதுகுறித்து அரசு ஏன் ஒரு முடிவு எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, “தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களிடம் அவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பான விவரங்கள் கேட்கப்படுகின்றன” என்று விளக்கம் அளித்தது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், “பார் கவுன்சிலில் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் முன்பு அவர்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளதா? என காவல் துறை மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. போலீஸ் பணியில் சேர்பவர்களுக்கு எதிராக வழக்கு உள்ளதா? என விசாரிக்கப்படுகிறது. 

அதேபோல ஆசிரியர் பணிக்கு சேருபவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளதா என காவல் துறை மூலம் ஏன் விசாரிக்கக் கூடாது?” என்றும் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment