சொத்து வரி உயர்வு.. தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

author-image
WebDesk
New Update
Madras High Court refuses to quash property tax hikeசொத்து வரி உயர்வு, தமிழ்நாடு அரசு, நீதிபதி அனிதா சுமந்த், சென்னை உயர் நீதிமன்றம், திமுக, Increase in Property Tax, Government of Tamil Nadu, Justice Anita Sumant, Madras High Court, DMK

சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூரில் சொத்து வரியை உயர்த்தி மாநில அரசு மே மாதம் உத்தரவிட்டது. முன்னதாக இது தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன.
இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது, சொத்து வரி உயர்வை மாநில அரசு தீர்மானிக்க முடியாது, மாநகராட்சிதான் தீர்மானிக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் 1998ஆம் ஆண்டு பிறகு சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் நீதிபதி அனிதா சுமந்த் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அப்போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும்” என்றார்.

மேலும், சொத்து வரி உயர்வை எதிர்த்த நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, சொத்து வரி உயர்வு தொடர்பாக சில மட்டுமே ஆட்சேபனை தெரிவித்துள்ளனர் என்ற கருத்த முன்வைத்த நீதிபதி, சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: