அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கோரிய எஸ்.பி. வேலுமணியின் மனு தள்ளுபடி

தனக்கு எதிராக செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் இதழுக்கு தடைவிதிக்க கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மற்றொரு மனுவும் தள்ளுபடி

By: Updated: June 3, 2019, 02:29:20 PM

Madras high court refuses to restrain NGO Arappor : உள்ளாட்சி துறை முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வந்தது. டெண்டர் ஒதுக்கீடு பெற்ற கே.சி.பி. இஞ்சினியர்ஸ், மேனகா அண்ட் கோ உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு எதிராகவும் அறப்போர் குற்றம் சாட்டியிறுந்தாது.

இந்நிலையில், தங்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கையுடனும்;
தங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டுமென்ற பிரதான கோரிக்கையுடனும் அமைச்சர் வேலுமணியும், 9 நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் இன்று பிறப்பித்த உத்தரவில், அறபோர் இயக்கம் பேச தடை விதிக்க கோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மனுதாரர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆவண ஆதாரங்களுடன் முகாந்திரம் இருப்பதால் தற்போதைய நிலையில் தடைவிதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடைக்கால உத்தரவு என்பது பிரதான வழக்கின் விசாரணையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல தனக்கு எதிராக செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் இதழுக்கு தடைவிதிக்க கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மற்றொரு மனுவையும் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும் தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட நக்கீரன் இதழுக்கு தடை கோரிய கே.சி.பி. இன்ஜினியர்ஸ்-ன் இடைக்கல மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேசமயம் கே.சி.பி. நிறுவன உரிமையாளர்களின் குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க : ராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலை தீர்மான விவகாரம் : அவகாசம் கேட்கிறது தமிழக அரசு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madras high court refuses to restrain ngo arappor to making corruption allegations against sp velumani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X