scorecardresearch

பட்டதாரி என்று ஏமாற்றி திருமணம்: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கவுன்சலிங்

அந்த பெண்ணின் 41 வயது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

பட்டதாரி என்று ஏமாற்றி திருமணம்: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கவுன்சலிங்
சென்னை உயர் நீதிமன்றம்

21 வயது பெண் ஒருவரை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங்கிற்கு சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் அவருக்கு வழங்கவிருக்கும் கவுன்செலிங் காலத்தில், அவரது கணவருக்கு இரண்டு வாரங்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்தவர், பெண்ணிடம் தனது உண்மையான கல்வித் தகுதியை கூறாமல் மறைத்தது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அந்த பெண்ணின் 41 வயது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

“அந்த பெண்ணின் கணவன் லயோலா கல்லூரியில் BCom முடித்திருப்பதைக் காட்டுவதற்காக அவரது கல்விச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது, ​​அவர் ‘அதைத் தனது தாயின் பையில் தேட வேண்டும் என்றார்.

பின்னர், மூன்றாவது பிரதிவாதி(கணவர்) தான் முன்பு கூறியது பொய் என்று ஒப்புக்கொண்டார்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கூடுதல் அரசு வக்கீல், தகவலின்படி, அந்த பெண்ணின் கணவர் 12-ம் வகுப்பு கூட முடிக்கவில்லை.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்க வதனா பாலகிருஷ்ணன், தனது மனுதாரரின் மகள் பள்ளிப் பருவத்தில் இருந்தே இதில் பாதிக்கப்படுவதாக கூறினார்.

மேலும், அந்த பெண் பிரதிவாதி ஆணுடன் தப்பிச் சென்று இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்யுமாறு குழந்தைகள் நலக் குழுவின் இயக்குநரிடம் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், அந்தப் பெண்ணைப் பார்க்க அவரது தாயை அனுமதித்தனர். இதற்கிடையில், பெஞ்ச் அவளை திருமணம் செய்து கொண்டவரை பார்க்க தடை விதித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madras high court sends woman for counselling at kilpauk

Best of Express