தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபி ஜாங்கிட்டுக்கு டிஜிபி-யாக பதவி உயர்வு வழங்க தடை விதித்து பிறபிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவிலில் கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்த ஜாங்கிட்டுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி-யாக இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்ககோரியும் தி.நகரை சேர்ந்த வித்யா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வழக்கு தொடுத்தார்.
அதில், ‘‘ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு ஆதரவாக ஜாங்கிட் செயல்பட்டு தனக்கு எதிராக 6 பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளார். அவர் இந்த பதவி உயர்வை பெற தகுதியற்றவர்’’ என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், ஜாங்கிட் பதவி உயர்வு தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஜாங்கிட் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் உள்நோக்கத்துடன் மனுதார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி .ஜி. ரமேஷ், ஜெ.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு ஜாங்கிட்க்கு எதிரான பதவி உயர்வுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை உத்தரவிற்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.