Advertisment

மெரினாவில் மாநகராட்சி அமைக்கும் கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court, high court set minimum rent for shops set up in Marina, சென்னை, சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரை, சென்னை உயர் நீதிமன்றம், chennai city corporation set shops in marina, marina beach, chennai, chennai city corporation

Madras High Court, high court set minimum rent for shops set up in Marina, சென்னை, சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரை, சென்னை உயர் நீதிமன்றம், chennai city corporation set shops in marina, marina beach, chennai, chennai city corporation

மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில் , 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், அக்கடைகளுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் வசூலிக்க முடிவெடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில், 100 ரூபாய் வாடகை என்பது ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதிகள், குறைந்த பட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாயாவது நிர்ணயிக்க உத்தரவிட்டனர்.

விரைவில் டெண்டரை இறுதி செய்து கடைகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,

கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக மாநகராட்சி விண்ணப்பித்தும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை உரிய பதில் அளிக்காததால், அதன் உறுப்பினர் செயலரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Chennai Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment