madras highcourt judges : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இனி நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வழக்குகளை விசாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 22 ஆம் தேதி ஊரடங்கு தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் 24 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டது. நீதிபதிகள் முக்கிய வழக்குகளை வீட்டில் இருந்தப்படியே காணொலி காட்சி மூலம் விசாரித்து வந்தனர்.
பின்பு ஊடரங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் மாதம் முதல் நீதிபதிகள் நீதிமன்றத்தில் உள்ள தங்களது அறைகளில் வீடியோ காணொலி காட்சி மூலம் மீண்டும் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது
அவர்களை தொடர்ந்து, நீதிபதிகளின் பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதனால் மீண்டும் ஐகோர்ட்டில் 6 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் என்று ஐகோர்ட்டு நிர்வாகம் அறிவித்து உள்ளது. இவர்களும் வீட்டில் இருந்தப்படியே வீடியோ காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.
அதே போல் முக்கிய வழக்குகளில் ஆஜாராகி வாதாட இருக்கும் வழக்கறிஞர்களும் வீட்டில் இருந்தப்படியே வீடியோ காணொலி காட்சி மூலம் தங்களது பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil