Advertisment

தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன், மருமகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. 

author-image
WebDesk
New Update
Madras HighCourt order condition bail to DMK MLA Karunanithi son and daughter in law Tamil News

தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தைப் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் ஜனவரி 18-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Madras High Court: பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது இளம்பெண், 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisment

வழக்கு 

இந்த பெண்ணை மெர்லினாவும், அவரது கணவரும் தாக்கி கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனையடுத்து, தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

தலைமைறைவு - கைது 

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தைப் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் ஜனவரி 18-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தலைமறைவாக இருந்த ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா இருவரையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், அவர்கள் ஆந்திராவுக்கு காரில் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இருவரையும் மடக்கிய போலீஸார் ஜனவரி 26ம் தேதி அன்று கைது செய்தனர். 

மனு 

இதனிடையே, எம்.எல்.ஏ மகன், மருமகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இருப்பினும், ஜாமீன் வழங்க பணிப்பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்களின் நீதிமன்ற காவலை நீட்டிகப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன், ‘பணிப் பெண்ணுக்கு மிகவும் கொடூரமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு காவல் துறை தரப்பு பதில் என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும், காவல் துறை தரப்பு பதில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி வெள்ளிக்கிழமைக்குள் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அன்றைய தினம் ஜாமீன் மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். 

ஜாமீன் 

இந்த நிலையில், வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன், மருமகளுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2 வாரங்களுக்கு நீலாங்கரை காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment