சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ; அவர் இந்து என்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிடடோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
கமலின் இந்த கருத்திற்கு தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகை காயத்ரி ரகுராம், எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கமலின் இந்த கருத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அவரது உருவப்பொம்மைகள் பல்வேறு இடங்களில் எரிக்கப்பட்டன. இதனையடுத்து அவரது வீடு மற்றும் மக்கள்நீதிமய்ய அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கமலின் கோட்சே குறித்த கருத்திற்கு பிரதமர் மோடியும் பதில் அளித்திருந்தார். அவர் அதில் எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல ; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின், அவர் நிச்சயம் இந்துவாக இருக்கமுடியாது. இந்துமதம் அமைதியை போதிக்கிறது. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து மதத்தின் நம்பிக்கை. அதைத்தான் இந்துமதம் மக்களிடம் போதிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு மற்றும் பல்வேறு தரப்பினரின் போராட்டம் காரணமாக, 2 நாட்கள் அவர் மேற்கொள்ளவிருந்த பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டன.
Kamal Haasan Row: திருப்பரங்குன்றத்தில் நேற்று ( 15ம் தேதி) தோப்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, கோட்சே குறித்து தான் கூறியது வரலாற்று உண்மை. நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. இந்த உண்மையை ஏற்க சிலர் தயங்குகின்றனர் என்று அவர் கூறினார்.
Web Title:Madras highcourt says no right to stay kamalhassan compaign
இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய கமல்ஹாசனை, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுறுத்தல். கமல் முன்ஜாமின் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
கமல் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு வாதம்.
தேர்தல் ஆணைய விதிகளின் படி மதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதமாகும். அதுவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசியது குற்றமாகும் - தமிழக அரசு
இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் வழக்கு . தாம் ஒரு இந்து என்பதால் மனுவை தாக்கல் செய்ததாக மனுதாரர் விளக்கம் . வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் கமல் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படுவதால் முன்ஜாமின் வழங்க வேண்டும்- கமல் தரப்பு வக்கீல் வாதம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. கமல் தரப்பு வக்கீல் வாதங்களை முன்வைத்து வருகிறார். அரவக்குறிச்சியில் கடந்த 12-ம் தேதி கமல் பேசியது தொடர்பாக 14-ம் தேதி சிஎஸ்ஆர் இல்லாமல் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. கமல் பேச்சு காரணமாக அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான சாட்சியம் இல்லை என்று கமலின் வக்கீல் வாதத்தை முன்வைத்துள்ளார்.
கமல்ஹாசன் , முன்ஜாமின் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துவங்கியது.
கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும், இதனைஅவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் முறையிட்டார். ஏற்கனவே இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கமலின் திரைப்படத்திலும் நாகரிகம் இல்லை, அரசியலிலும் நாகரிகம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
கமல் குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு.
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு: நான் ஹிந்து பெற்றோருக்கு பிறந்துள்ளேன். பல்வேறு மதங்களுக்கு இடையே உலக சகோதரத்துவம் மற்றும் அமைதியுடன் வாழ்வதை விரும்புகிறேன். எந்த மதத்திற்கும் விரோதமாக பேசவில்லை. 'காந்தியை ஏன் கொன்றேன்' என்ற புத்தகத்தில் 'ஹிந்துக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி தான் காரணம்' என கோட்சே தெரிவித்துள்ளார். நான் நாதுராம் கேட்சே பற்றி தான் பேசினேன்; ஹிந்துக்களுக்கு எதிராக பேசவில்லை. எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசவில்லை. சிலர் ஆர்வக்கோளாறில் இதை மதப் பிரச்னையாக சித்தரிக்கின்றனர். என் நாக்கை துண்டிக்க வேண்டும் என மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் பேசியதை புகார்தாரர் நேரடியாக பார்க்கவில்லை. தவறாக என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.
இந்த நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று பா.ஜ. பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் நடிகர் கமல்ஹாசன் பேசிவிட்டார் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமலின் பேச்சு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ள, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரே சரியில்லை . கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
மதக் கலவரத்தை துாண்டும் வகையில் பொது இடத்தில் பேசியதாக கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் டில்லி உள்பட 17 இடங்களில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.