சென்னையில் உள்ள ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்திமா தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
Advertisment
இந்நிலையில், பாத்திமாவின் தற்கொலை, இந்தாண்டு மெட்ராஸ் ஐஐடியில் நடந்திருக்கும் நான்காவது தற்கொலை சம்பவமாகும். மாணவர்களின் இந்த மனநிலைக்கு உளவியல் ரீதியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செமஸ்டரின் போதே, ஐஐடி மெட்ராஸ் மாணவர் அமைப்பினர் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். அதில், 'மாணவர்களின் அழுத்தத்தைப் போக்க, ஐஐடி நிர்வாகம் வெளியில் இருந்து ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவில் உளவியலாளர்கள், மனநல மேம்பாடு வல்லுனர்கள், சமூகவியலாளர்கள், கல்வியாளர்கள், ஐஐடி மெட்ராஸின் ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெற வேண்டும். அவர்கள் மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தம், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணி கொண்டோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவுன்சலிங் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
Advertisment
Advertisements
வகுப்பில் மாணவ, மாணவியரின் செயல்பாட்டை பொறுத்தே, தேர்ச்சி, தோல்வி முடிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒருவேளை மாணவர்கள் தோல்வி அடைந்துவிட்டால், அவர் மீண்டும் அதை க்ளீயர் செய்வது மிகவும் கடினமாகிறது. தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் அந்த வகுப்புகளில் கலந்து கொள்ளவோ, மீண்டும் தேர்வு எழுதவோ, ஆசியர்கள் குழு உறப்பினர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே முடியும்.
பி.டெக் மாணவர்களுக்கு மட்டும் இந்த அழுத்தம் கிடையாது. மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இதே அழுத்தம் தான் என்று தெரிகிறது.
இளநிலை படிப்பில், மாணவர்கள் தேர்வு எழுத 85 சதவிகிதம் வருகைப்பதிவு தேவை. ஒருவேளை, தேர்வு சமயத்தில் உடல்நிலை சரியில்லாமல் போய், 2 அல்லது 3 வாரங்கள் விடுப்பு எடுக்க நேர்ந்தால், அவரால் தேர்வை எழுதவே முடியாது என்றும் கூறப்படுகிறது.
மருத்துவம் படிப்பவர்கள், கடினமான பாடங்களையும், செய்முறை தேர்வுகளையும் சந்திக்கிறார்கள். ஆனால், தற்கொலைகள் ஐஐடியில் தான் அதிகம் நிகழ்கின்றன.
அப்படியெனில், ஐஐடியில் எது மாணவர்களின் உயிரை பலி கேட்கிறது?. இங்கே, வகுப்பில் முதலிடம் பெற மிக மிக மோசமாக மாணவர்களிடையே போட்டி போடுகின்றனர். ஐஐடி நிறுவனம், Mitr எனும் குழுவை அறிமுகம் செய்தது. மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க அமைக்கப்பட்ட குழு அது. சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். சில மாணவர்கள் கவுன்சலிங் வேண்டாம் என்று தவிர்த்தால், அவர்களது தனிப்பட்ட பிரச்சனைகள் அம்பலப்படுத்தப்படுகிறது.
வெளியிலிருந்து தொழில்முறை உலவியலாளர்களை ஐஐடி பணியமர்த்தியது. ஆனால், அவர்களை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கவே பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.