Advertisment

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: அரசு நோட்டீஸுக்கு எதிராக வழக்கு தொடர நிர்வாகம் முடிவு

தமிழக அரசு மைதானத்திற்கு சீல் வைத்து நோட்ஸ் வழங்கிய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் முடிவு.

author-image
WebDesk
New Update
Guindy Race Course campus Sealed for Rs 780 crore rent arrears Tamil News

சென்னை கிண்டியில் உள்ள தி மெட்ராஸ் ரேஸ் கிளப் (எம்.ஆர்.சி) பிரதிநிதி ஒருவர், செப்டம்பர் 10, செவ்வாய்கிழமை பேசுகையில், சீல் வைப்பு மற்றும் நோட்ஸ் வழங்கி செயல்பாடுகளை நிறுத்துவதற்கு எதிரான அரசாங்க உத்தரவை எதிர்த்து  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறினார்.

Advertisment

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை வாடகை பாக்கி ரூ.730 கோடி செலுத்தவில்லை என்பதால் அதற்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, உடனடியாக சுவாதீனம் எடுக்கும் வகையில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தது.

 இதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு காலி செய்ய அவகாசம் வழங்காமல் சுவாதீனம் எடுத்து சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, குத்தகை ரத்து மற்றும் சுவாதீனம் தொடர்பாக தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உரிய அவகாசம் வழங்கி அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கும் உத்தரவி்ட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக ரேஸ் கிளப் நுழைவாயிலில் வைக்கப்பட்ட சீலை இன்னும் அதிகாரிகள் அகற்றவில்லை எனக் கூறி கிளப் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ரூ.730 கோடியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி ரேஸ் கிளப்புக்கு செல்லும் மூன்று நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை அரசு மீறியிருந்தால் அது தொடர்பாக வழக்கு தொடரலாம் என ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment