Madras University deficit crosses Rs.100 crore, seeks Rs.88 crore from TN govt: சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.100 கோடியை தாண்டியுள்ளதால், பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் தள்ளாடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தின் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி, அதன் திரட்டப்பட்ட பற்றாக்குறை ரூ.100 கோடியைத் தாண்டி நிதி நெருக்கடியில் உள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற செனட் கூட்டத்தில், பல்கலைக்கழகம் தனது ஆண்டு பட்ஜெட்டை ஒப்புதலுக்காக தாக்கல் செய்தது. 2022-23 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.164 கோடியாகும், இதன் வருவாய் 2021-22ல் ரூ.79 கோடியிலிருந்து 2022-23ல் ரூ.92 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளமாக மாநில அரசின் மானியம் ரூ.63 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தக் கணக்கில் பற்றாக்குறை ரூ.8.5 கோடியாக இருக்கும்.
தொடர்ந்து அதிகரித்து வரும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் காரணமாகவும், மற்றும் வருவாய் மற்றும் மானியங்களில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகவும் இந்த பற்றாக்குறை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது, நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பலன்கள், ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க, ஒருமுறை சிறப்பு மானியமாக ரூ.88 கோடியை தமிழக அரசிடம் சென்னை பல்கலைக்கழகம் கோரியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரூ85 கோடி முதல் ரூ90 கோடி வரையிலான ஊதியத்தை திருப்பித் தருமாறு சென்னை பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் கேட்டாலும், உள்ளூர் நிதி தணிக்கை ஆட்சேபனைகளை காரணம் காட்டி 35% வரை மறுக்கிறது. பல்கலைக்கழகத்திற்கு சுமார் ரூ60 கோடி வரை மட்டுமே கிடைக்கிறது.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் துபாய் பயணம் தனி விமானச் செலவை தி.மு.க ஏற்கிறது: இ.பி.எஸ்-க்கு தங்கம் தென்னரசு பதில்
பெரும்பாலான நிதி தணிக்கை ஆட்சேபனைகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்குவதில் விதிகளை மீறுவதாகும். தணிக்கை ஆட்சேபனைகளை நீக்குவதற்கு பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது, இதனால் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு சம்பளத்தில் முழு மானியம் கிடைக்கும்.
வருவாயை அதிகரிக்க, தொலைதூரக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தற்போது வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய படிப்புகள் மற்றும் வேலை சார்ந்த சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2021ல் தொலைதூரப் படிப்புகளில் சேரும் எண்ணிக்கை 29,811 ஆக இருந்தது, இது கடந்த ஐந்தாண்டுகளில் அதிகம். பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் 11 புதிய ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
துணைவேந்தர் எஸ்.கௌரி கூறுகையில், "மாணவர்களை கவரும் வகையில் தொலைதூர முறையில் பல புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது உட்பட வருவாயை அதிகரிக்க பல்கலைக்கழகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசின் முழு சம்பள மானியம் பெறுவதற்கு தணிக்கை எதிர்ப்புகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2021ல் தொலைதூரப் படிப்புகளில் சேர்க்கை அதிகரிப்பது சாதகமான அறிகுறியாகும்." என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தில் 1,400 க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மொத்த வருவாயில் சுமார் 40% மாதாந்திர ஓய்வூதியத்திற்கு மட்டுமே செல்கிறது. இதற்கிடையில், 39 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஒன்பது ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது, இது ஊதியத்திற்கான அரசாங்கத்தின் மானியத்தை அதிகரிக்கும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.