கிருபா மோகன் அட்மிசன் ரத்து விவகாரம் : 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு

தன்னை நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் – மாணவர் கோரிக்கை

Madras University Kripa Mohan admission denied issue
Madras University Kripa Mohan admission denied issue

Madras University Kripa Mohan admission denied issue : சென்னை பல்கலைக்கழகத்தில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து மாணவர் கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras University Kripa Mohan admission denied issue

சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்த பின், தத்துவ இயல் துறையில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் சேர்ந்த கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவில், உரிய கட்டணம் செலுத்தி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், விதிகளை மீறியதால் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என துணைவேந்தர் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : பெரியார் வாசக வட்ட உறுப்பினருக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அட்மிசன் மறுப்பு… காரணம் என்ன?

பல்கலைக்கழக விதிகள் எதையும் மீறாத நிலையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் பேட்டியளித்துள்ளார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மெட்ராஸ் யுனிவர்சிட்டி மாணவர் கிருபாவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மற்றும் வழக்கறிஞர்கள் ஜிம் ராஜ் மில்டன், மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும், தன்னை நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினம் விசாரணையை தள்ளிவைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras university kripa mohan admission denied issue high court seeks explanation from the institute

Next Story
’பொதுவான மொழி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்!Rajinikanth on Hindi Imposition
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com