சென்னை பல்கலைக்கழகத்தின் பத்திரிகை மற்றும் தகவல் தொடர்புத் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் டி ஜெயசக்திவேல், மாணவர்களிடையே தமிழ் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக பாட்காஸ்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் குறித்த புரிதல் குறைந்த அளவே இருப்பதை உணர்ந்த அவர் இந்த முயற்சியை எடுத்துள்ளார். தனது பாட்காஸ்ட் மாணவர்களை பிரபல எழுத்தாளர்களுக்கும் அவர்களின் சிறுகதைகளுக்கும் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
"தமிழ் சிறுகதைகள்" என்று அழைக்கப்படும் தனது போட்காஸ்டில், சிறுகதையைப் படிப்பதற்கு முன், ஜெய்சக்திவேல் கேட்போருக்கு ஆசிரியரின் சுருக்கமான அறிமுகத்தை அளிக்கிறார். அவரது கதைகளுடன் ஒரு இனிமையான பின்னணி கேட்போரின் கவனத்தை ஈர்க்க உதவுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் 15 முதல் 35 நிமிடங்களுக்குள் இருக்கும்.
முன்னர் ஒரு பத்திரிகையாளராக இருந்த ஜெய்சக்திவேல், தனது மாணவர்களுக்கு "ரேடியோ பிரொடக்ஷன் கோர்ஸ்" கற்றுக்கொடுப்பதற்கான ஒரு வழியாக தமிழ் சிறுகதைகளை தொடங்கியதாக கூறினார். அவர் கூறுகையில்"எங்கள் ரேடியோ பிரொடக்ஷன் வகுப்புகள் இருவழி தொடர்பு வகுப்புகளாக இருந்தன. ஆனால் கொரோனாவுக்கு பின் மாணவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க ஒரு வழியைக் கொண்டு வர வேண்டியிருந்தது. அதனால் அவர்களை பாட்காஸ்ட்களைத் தொடங்கும்படி கேட்டேன், அவர்களுக்கு நான் சொந்தமாக உதவ முடிவு செய்தேன். ” என்றார்.
இளைய தலைமுறையினருக்கு புத்தகங்களைப் படிக்கவோ அல்லது கதைகளில் உள்ள கருத்துகளைப் புரிந்து கொள்ளவோ கொஞ்சம் பொறுமை இருப்பதை உணர்ந்ததாக கூறினார். “நான் ஒரு கதையைப் பற்றி பேசும்போதோ அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்கும்படி கேட்கும்போதோ, ஒரு PDF நகல் கிடைக்குமா என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் ஓரிரு பக்கங்களை மட்டுமே படித்து அதை மறந்து விடுகிறார்கள். பாட்காஸ்ட்கள் மூலம், மற்ற வேலைகளைச் செய்யும்போது அவர்கள் முழுமையான கதைகளைக் கேட்க முடியும், ”என்று ஜெய்சக்திவேல் கூறினார்.
தனது பாட்காஸ்ட் தமிழ் சிறுகதைகளைப் படிக்கும் பழக்கத்தை புதுப்பிக்கும், அல்லது இளம் எழுத்தாளர்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என நம்புகிறார். உண்மையில், அவரது பாட்காஸ்ட் ஏற்கனவே பிரபலமாக உள்ளது, கனடாவின் மாண்ட்ரீலில் ஸ்ரீலங்கன் தமிழர்களால் நடத்தப்படும் உள்ளூர் எஃப்எம் நிலையம், அவரது சிறுகதைகளை மறு ஒளிபரப்பு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளது.
"எனக்கு கிடைத்த ஆதரவு, இதுவரை 175 ஆசிரியர்களை ஆவணப்படுத்த என்னைத் தூண்டியுள்ளது. தமிழ் இலக்கியக் காட்சியைப் பற்றி யாராவது அறிய விரும்பினால், குறிப்பாக கடந்த 100 ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை பற்றி தெரிந்துகொள்ள எனது போட்காஸ்டைப் பார்வையிடலாம் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும். மேலும், ஜர்னலிசம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் படிக்கும் 22 மாணவர்கள் தங்களது பாட்காஸ்ட்கள் ஆடியோபுக்காக பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு தொகுத்து வழங்க உள்ளனர். இது அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்" என ஜெய்சக்திவேல் கூறியுள்ளார்.
பாட்காஸ்ட்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு பல வகையில் உதவியாக இருக்கும். பாட்காஸ்ட்கள் வெறும் குரல் குறிப்புகள் போன்றவை அல்ல. உங்கள் கதை தனித்துவமாக ஒலிக்க வேண்டும். பின்னணி என்ன பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் குரலை எவ்வாறு வளர்ப்பது, மேலும் ஆசிரியரின் பணியை நியாயப்படுத்த சில வெளிப்பாடுகளை எவ்வாறு பயன்படுத்துவது என ஜெய்சக்திவேல் விளக்கியுள்ளார். பாட்காஸ்ட் தொடங்க பெரிய ஸ்டுடியோக்கள் அல்லது வசதிகள் தேவையில்லை, சேனலை இயக்க மொபைல் போன் போதுமானது.
" பதிப்புரிமை சிக்கல்கள் இருப்பதால் பாட்காஸ்ட்களை வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஜெய்சக்திவேல் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.