Madras University Results 2018: சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது என பதிவாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இது போல் கடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் பலரும், இன்று வெளிவரும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். சென்னை பல்கலைகழகத்துடன் இணைந்து நடத்தப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை மொத்தம் 109-ஆக உள்ளது. இவ்வாறு அனைத்துக் கலைக் கல்லூரிகளிலும் தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு கத்திருக்கின்றனர்.
Madras University Results 2018: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் குறித்து அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்:
சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மேலும் தொழில்முறை இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மறுக் கூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் முதல் ஜூலை 4ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Madras University : சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையத்தளத்தின் மூலம் காணலாம்.
மேலும், http://results.unom.ac.in/results, http://ideunom .ac.in/results, http://egovernance .unom.ac.in/results ஆகிய இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், பி.பி.ஏ., எம்.காம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய பாடிப்புகளுக்கான 2,4,6வது செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என சென்னை பல்கலை கழகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பல்கலை கழக தேர்வு முடிவுகள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என திடீரென செய்தி பரவியது. ஆனால் இப்போது வரையில் முடிவுகள் வெளியாகவில்லை. சென்னை பல்கலை கழகத்தின் தேர்வு முடிவுகள் மாலை 7 மணியளவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பல்கலை கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில் நுட்ப காரணங்களால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதாக பல்கலை கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரவு எட்டு மணி வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், முடிவுகள் நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.