Madras university result 2019 date and time: சென்னை பல்கலைக்கழக இணையதளம் சரியாக இயங்காததால் மாணவ, மாணவிகள் குழப்பம் அடைந்தனர். மொத்தமாக ஏராளமான மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்க்க முண்டியடித்ததால், இணையதளம் முடங்கியது. சற்று நேரத்தில் இணையதளம் சரியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையதள நேரடி லிங்க் இங்கே தரப்படுகிறது.
தமிழ்நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு இளநிலை, முதுநிலை வகுப்புகளுக்கான பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயில்கிறார்கள்.
university of madras result 2019: unom.ac.in -ல் தேர்வு முடிவுகள்
ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களில் 2 செமஸ்டர் தேர்வு நடைபெறும். அதன்படி பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், பி.சி.ஏ. உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்பு மாணவ மாணவிகளுக்கு 1, 3, 5 ஆகிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. எம்.ஏ., எம்.எஸ்.சி, எம்.காம் உள்ளிட்ட முதுநிலை மாணவர்களுக்கு 1, 3 ஆகிய செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை ஜனவரியில் வெளியிடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை ஜனவரியில் வெளியிடுகிறார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்திலும், அதன் இணைப்புக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் இணையதளம் திடீரென ஜனவரி 22 அன்று முடங்கியது. தேர்வு முடிவுகள் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள மாணவ, மாணவிகள் மொத்தமாக இணையதளத்தை தொடர்புகொள்ள முயன்றதால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் அன்று (ஜனவரி 22) ரிசல்ட் வெளியாகவில்லை.
தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ‘விடைத்தாள்களை திருத்தும் பணி ஏறக்குறைய நிறைவு பெற்றுவிட்டது. பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட முடியும் என நம்புகிறோம்’ என்றார்கள். எனவே எந்த நேரத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பல்கலைக்கழக இணையதளம் இயங்காமல் முடங்கியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இணையதளம் சரியாக இயங்க ஆரம்பித்துவிடும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Madras University Result 2018: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நேரடி ‘லிங்க்’ இங்கே...
எனினும் இணையதள செயல்பாட்டை சரி செய்தால்தான் தேர்வு முடிவு வந்துவிட்டதா, இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியும் என மாணவ, மாணவிகள் கூறுகின்றனர். கடைசியாக கிடைத்த தகவல்படி, பிப்ரவரி 4 (இன்று) இரவு தேர்வு முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழக இணையதள நேரடி லிங்க் செல்ல இங்கே ‘க்ளிக்’ செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.