மெட்ராஸ் டே :
சென்னை என்ற நகரம் உருவாகி 379 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2004 முதல் இந்த நாள் ‘மெட்ராஸ் டே’ என்று சென்னைவாசிகளால் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டுவருகிறது.
சென்னையை வெறுமனே மனிதர்கள் வசிக்கும் பகுதி என்றால் அது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சென்னையின் வரலாறு காலத்தால் அழிக்க முடியாத ஒன்று.
கட்டிடங்களும் அகண்ட சாலைகளும் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு திடீர் நகரம் என்றோ சொல்லிவிட முடியாது. அது பெரிய வரலாற்றுத் தொடர்ச்சிகொண்ட நகரம். சென்னையில் ஆரம்ப கால அடையாளமாக சொல்லப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, நேப்பியர் பாலம், எல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் ஆகிய இடங்கள் காலப்போகில் மாறினாலும் சென்னை என்றுமே மாறியதில்லை.
நாள்தோறும் புதிய புதிய மனிதர்கள், புதிய பிரச்சனைகள், மழை, வெயில், எதையும் தாங்கும் நகரமாகத்தான் சென்னை இருந்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஃபரண்ட்ஸ் ஆப் சென்னை என்ற இணையதளத்தை தி இந்து நிறுவனம் தொடக்கியது. இதில் சென்னை நகரில் வாழும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பதிவு செய்யலாம்.
அதேபோல், சென்னை நகரின் வரலாற்றை மக்கள் அறிந்துக் கொள்வதற்காகவும் சென்னை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் என்ற செயலியை வரலாற்றாளர் ஸ்ரீராம் வெளியிட்டார். சென்னை நகரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 முதல் 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
சிங்கார சென்னை
அதே போல் இந்தாண்டும் மெட்ராஸ் டேவை உற்சாகத்துடன் கொண்டாடும் இடங்களின் விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிகளின் விவரங்கள் :
1. சிந்தாரிப்பேட்டை, தரமணி, கிரீன்வயஸ் ரோடு ஆகிய இடங்களில் சுவற்றில் வண்ணம் தீட்டி மகிழும் நிகழ்வு நடைபெறுகிறது.
2. அண்ணாநகரில் உள்ள வி.ஆர் மாலில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக் கொள்ளும் வித்யாசமான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. பெசண்ட் நகரில் 'ட்ரீ வாக்' என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி.
4. அடையாறு பூங்காவில் ’பட்டர்ஃப்லை வாக்’.
5. புரசைவாக்கம் புட் வாக்