/tamil-ie/media/media_files/uploads/2022/09/4408d2a219411c01057fc568ae22862e_original.jpg)
ஆ. ராசா இந்து மதம் பற்றி பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மதுரை ஆதீனம், கோவத்தில் செய்தியாளர் சந்திபிலிருந்து சென்றுவிட்டார்.
வீரமணிக்கு நடைபெற்ற பாரட்டு விழாவில், திமுக எம்.பி ஆ. ராசா இந்து மதம் குறித்து சர்க்கைக்குறிய கருத்து தெரிவித்தார். பாலியல் தொழியில் ஈடுபடும் மகன்கள் என்று ஒடுக்கப்பட்டவர்களை இந்து மதம் குறிக்கிறது என்று ஆ. ராசா மேடையில் பேசினார். இந்நிலையில் இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. அதிமுகவினர், பாஜகவினர் என்று எல்லா தரப்பினரும் தொடர்ந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரை ஆதினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆ.ராசா பேசியது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதனால் கோவமடைந்த மதுரை ஆதினம் ’என்னை வம்பில் மாட்டிவிட கேள்வி கேட்கிறீர்கள்’ என்று கூறினார். ஆனால் செய்தியாளர்கள் தொடர்ந்து பதிலளிக்குமாறு கேட்டதால் அவர் கோவத்துடன் பத்திரிக்கையாளர்களை யார் அழைத்தார்கள் என்றும் நான் உங்களை அழைக்கவே இல்லை என்று பேசினார். சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.