மதுரை ஆதீனம் மிகவும் பழமையானது, இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த 292வது மதுரை ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள 1,191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்தகைக்கு பவர் செய்யப்பட்டுள்ளது.
இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது
இது சட்டவிரோதமானது எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை மீட்டுத் தர வேண்டுமென மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த சண்முகனுக்கு சில ஆண்டுகளாக 1200 ஏக்கர் நிலத்தை மதுரையைச் சேர்ந்த பழைய ஆதீனம் கொடுத்தார் ஆனால் அவர் ஏமாற்றினார்.
அதனை மீட்டுத் தருமாறு பிரதமரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளேன், விரைவில் மீண்டும் அவரைச் சந்தித்து நிலத்தை விரைவில் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன், என்று ஹரிஹர தேசிக பரமாச்சார்யா ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
நிலம் மீட்கப்பட்டால், விவசாயக் கல்லூரி மற்றும் பள்ளிகள் கட்டுவதற்கு நிலம் வழங்கப்படும், என்று அவர் மேலும் கூறினார்.
மடத்தின் 1,200 ஏக்கர் சொத்தை திரும்பப் பெற 2019 முதல் சட்டப்பூர்வமாக போராடி வருகிறேன்.
அந்த தொழிலதிபர் 292-வது ஆதீனம் சார்பாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் பொது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது சொந்த நிறுவனத்தில் குத்தகைதாரராக செயல்பட்டு மதுரை ஆதீனம் நிர்வாகத்தை சட்டவிரோதமாக ஏமாற்றியுள்ளார்.
அந்த தொழிலதிபர் தென் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பதிவு செய்து, நிலத்தை தனது நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தார். இது சட்டவிரோதமானது.
சுமார் 1200 ஏக்கர் நிலம் “சட்டவிரோதமாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது” என்பதை மடம் அறிந்ததும், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட நபருக்கு மடத்தின் சார்பில் 2019 இல் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“