/indian-express-tamil/media/media_files/2025/06/14/j5wIhCRgkRPMGjQnBBXg.jpg)
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் சூறையாடியதாக புகார் எழுந்த நிலையில், நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் சூறையாடியதாக புகார் எழுந்த நிலையில், நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். இது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வே.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடையவர் பிரபாகரன், போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து காவல் நிலையத்தில் வன்முறைக்கு உட்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பேரையூர் தாலுகாவை சேர்ந்த ஒரு வாலிபர் கண்மாய் கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள பிரபாகரனின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அவர் இல்லாத நிலையில் அவரது தந்தையை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதை அறிந்த பிரபாகரன், கோபத்தில் வெறித்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. பிரபாகர் மற்றும் அவரது கூட்டாளி இருவரும் மது போதையில் நேற்று இரவு சத்திரப்பட்டி காவல் நிலையம் சென்று, உள்ளே உள்ள பொருட்களை சேதப்படுத்தி தப்பியோடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் சூறையாடியதாக புகார் எழுந்த நிலையில், நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். #RBUdhayakumar#ADMKpic.twitter.com/0MBwkq2Mqo
— Indian Express Tamil (@IeTamil) June 14, 2025
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இன்று சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று பார்வையிட முயன்றபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தை கைவிட மறுத்ததால், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.