Advertisment

நிபந்தனைகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி

எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு சில நிபந்தனைகளையும் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai AIIMS Hospital

Madurai AIIMS Hospital

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் 'எய்ம்ஸ்' மருத்துவமனை ரூ.1,977.8 கோடி மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டப்படுகிறது. 82 சதவீதம் நிதி தொகையான ரூ.1627.70 கோடியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதி 18 சதவீதம் தொகையை மத்திய அரசு நேரடியாக இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு வழங்குகிறது.

இந்நிலையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் கடந்த மே 2 ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்தது. இந்நிலையில், கடந்த மே 10 அன்று இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மேலும் எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு சில நிபந்தனைகளையும் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

அதன்படி கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைப்பதற்கும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும்; மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்; தரமான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும். சிவகாசி, விருதுநகர் வெடி விபத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும்.

மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்; எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்; கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதற்காகன கட்டமைப்பு அமைக்க வேண்டும்; ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்த கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு சில நாட்களில் தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment