Madurai AIIMS Hospital Contempt of Court Case: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை நிதியை ஒதுக்கி விரைவில் கட்டிட பணிகளை தொடங்க வேண்டும்; நீதிமன்றத்தில் கூறப்பட்டதுபோல் பணிகள் நடைபெறவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடங்க வேண்டும் என ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 36 மாதங்களாக நடைபெறாதது ஏன் எனக் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு, “கரோனா காலத்தில் பணிகள் நடைபெறவில்லை” என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
மேலும், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரின் வாக்குமூலத்தை பதிவு வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.
மனுதாரர் ரமேஷ் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“