ரூ. 35கோடி மதிப்பீட்டில் மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ரூ. 35கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

ரூ. 35கோடி மதிப்பீட்டில் மதுரை விமான நிலைய சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. விரிவாக்க பணிக்காக விமான நிலையத்தை சுற்றியுள்ள 610 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் 100 ஏக்கர் அரசு (புறம்போக்கு) நிலங்களைத் தவிர்த்து மீதமுள்ள இடங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடமிருந்து பணம் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 35 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு 14 மாதங்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madurai airport expansion work rs 35 crore tender released to build wall

Exit mobile version