scorecardresearch

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 23 காளைகளை அடக்கி கார் பரிசு வென்ற அபி சித்தர்

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும்போது காவல்துறையினரின் வேனில் மோதி காயமடைந்த அபி சித்தருக்கு முதலுதவி சிகிச்சை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 23 காளைகளை அடக்கி கார் பரிசு வென்ற அபி சித்தர்

பொங்கல் பண்டிகைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்றது.

வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் தப்பி மறுபுறம் சென்றது.

7 சுற்றுகள் நிறைவுக்கு வரும் பொழுது, அபி சித்தர் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் வெற்றியை நோக்கி வந்தார். அதன்பின்னர் ஒரு காளையை அடக்க முயற்சி செய்தபோது, எதிர்பாராத விதமாக காவலதுறையினரின் வேனில் மோதி காயமடைந்தார்.

அதன்பின் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அழைக்கப்பட்டதும், மீண்டும் களத்திற்கு சென்று காளைகளை அடக்கினார்.

9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் வெற்றிபெற்றார். அஜய் என்பவர் 19 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திலும், ரஞ்சித் குமார் என்பவர் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்திலும் வெற்றிபெற்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madurai alanganallur jallikattu top ranked winner for this year 2023