/indian-express-tamil/media/media_files/2025/01/22/h3V7NEQvA1fSXQBJzAHM.jpg)
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டியை சந்தித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டியை சந்தித்தார்
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இன்றைய தினம், புதுடெல்லியில், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி அவர்களை, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு L முருகன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசினோம்.
மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் அவர்கள் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் எப்போதும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் நலனுக்காகத் துணை நிற்பார் என்று நமது விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.
மேலும், மேலூர் தொகுதி விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி அவர்கள் உறுதி அளித்துள்ளார்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம், புதுடெல்லியில், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் திரு @kishanreddybjp அவர்களை, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS… pic.twitter.com/4nnkfVC86b
— K.Annamalai (@annamalai_k) January 22, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us