Advertisment

மாசி களரிக்கு அரசு பொது விடுமுறை: அர்ஜுன் சம்பத் கோரிக்கை

மாசி களரிக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Madurai Arjun Sampath Hindu Makkal Katchi leader demands public holiday for Masi Kalari Festival Tamil News

மாசி களரிக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அர்ஜுன் சம்பத் பேசுகையில், "திருப்பரங்குன்றமானது முருகப்பெருமானின் முதல் படை வீடாக திகழ்கிறது. மலையே சிவனாக காட்சி தருகிறார். மலை முழுவதும் முருகப்பெருமானுக்கு சொந்தம். வெளியில் இருந்து வரும் சில முஸ்லிம் அமைப்புகள் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுப்போம் என்று பிரச்சினைகளை தூண்டும் விதமாக செயல்படுகிறார்கள். 

Advertisment

லண்டன் கோர்ட்டு, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகப்பெருமானுக்கு சொந்தம் என்ற தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்துல் சமது எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல், கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தைப்பூசம் திருநாளில் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது போல மாசி களரிக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்." என்று அவர் கூறினார்.

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment